Tuesday, December 15, 2009

நல்லா நடிக்கிறான் தோனி,,,,

ரொம்ப நாளா இதை பத்தி எழுதனும்நு நெனச்சேன் இன்னிக்கு எழுதுறேன்,..பெருசா இருக்க கூடாதுனு முடிந்த வரை சுருக்கி எழுதி இருக்கிறேன் .

""கிரிக்கெட்""சிறுசு முதல் பெருசு(மன்னிக்கவும் எதுகை மோனைகாக) வரை வெட்டி பேச்சு பேசுறதுக்கு மட்டுமே பயன்படும் ஒரு விஷயம்.

நம்ம நாடு என்கிற எண்ணத்தில் நானும் கிரிக்கெட் பாத்துட்டு இருந்தேன் ஒரு காலத்தில் இப்போ என்னமோ அந்த எண்ணமே இல்லை.காரணம் எல்லாருமே சினிமா நடிகர் மாதிரி இருக்காங்கள் .யாரும் நாட்டுக்காக ஆடுவது போல் தெரியலை.

பலருக்கு இந்தியன் டீம்லே இடம் கிடைக்கணும்னு நெனச்சது போய் IPL டீம்லே இடம் பெறுவதே கனவாக இருக்கு .

செரி ஒரு விளையாட்டு என்று கூட ரசிக்க முடியவில்லை எப்பவும் ஒருதலை பச்சமாக பந்துவீச்சாளர்களை காய்ச்சுவது ,ஆட்டகளத்தின் தன்மையை பொறுத்து வெற்றி, தன் இனத்தவனை அணியில் சேர்ப்பது என பலவற்றை சொல்லலாம்..

இதை விட உச்சகட்ட கொடுமை என்னன்னா வெற்றி பெற்றால் ""தோனி பாய்ஸ்""நு சொல்றது தான் ,,,,,,இது இந்தியன் டீமா இல்ல தோனி வாங்கியே டீமா தெரியலை ????

டீமை உருவாக்கியவர் என்று சொல்வின்களோ??? நல்ல பாருங்க எல்லாரும் பழையவர்கள் தான்......ஒரு சில IPL playerகளை தவிர..இவர்கள் IPL லில் மட்டுமே ஆடுவார்கள்.

தோனி -- நாட் அவுட் காக ஆடும் ஒருவர், எப்பவும் முதல்டத்தில் இருக்க போராடுபவர் (கல்லா கட்டும் இல்ல!!!),

நல்ல நடிகர் ,,,பயபடாத மாதிரி நடிப்பது எப்படி என இவரை பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.சினிமா துறை நல்ல நடிகரை இழந்துவிட்டது . இதில் CAPTAINS COOL என பட்டம் வேறு.
எந்த ORDERல PRESURE இருக்காதோ அந்த ORDERல் இறங்குவார் ரசிகர்களை ஏமாத்த எவழவு ரன் தேவையோ அத அடுச்சுட்டு ஓடிருவாரு .பல கட்சி தலைவர்களின் வாழ்த்துக்கள் கிடைக்கும்.

ஊடகங்கள் இவருக்கு பக்க பலம் இவர் இரண்டு ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும் ""இரண்டு ரன்கள் குவித்தார்"" என்றே எழுதும். அவர்களுக்கு விளையாட்டு செய்திகள் பக்கத்தில் போட கிரிக்கெட்டை தவிர வேறதுவும் தெரியாது.

உதாரணம்

9 ரன்கள் எடுத்த தோனி நிதானமாய் ஆடியதாகவும் , 21 ரன்கள் எடுத்த ரைனா ஆடாதது போலவும் இருக்கும்.மேலும் தோனி அவுட் ஆனது பற்றி சொல்லி இருக்கமாட்டர்கள்.

காசுக்காக மட்டுமே ஆடும் இந்த விளையாட்டை இனியும் பார்த்து நேரத்தை வீணடிக்க நான் தயாராய் இல்லை.
நீங்களே இந்த தோனி பாய்ஸ் ய் பாருங்கள்.

Tuesday, December 1, 2009

சுனா பானா





ச்சே
அவர பாத்து எப்படி அந்த கேள்வி கேக்கலாம்,மனசாச்சியே இல்லையா !!
என்ன உலகம் டா இது,,
இருந்தாலும் அவர பாத்து எப்படி அந்த கேள்வி கேக்கலாம்,,,


ஒரு finance minister கிட்ட போய் விலைவாசி உயர்வை பற்றி பேசலாமா ??
அவருக்கு வேற வேலையே இல்லையா , வீட்டு கணக்கே கொஞ்சம் கஷ்டம் தான்!!
ஒரு பதவி குடுத்துட்டு கேள்வி கேட்டுட்டே இருந்தா என்ன இது??

மக்களுக்காகவே அரசியல் வாழ்க்கையை அர்ப்பணி
ச்சா இப்படியா !! ,,,,வயசான காலத்திலே போய் இப்படி கஷ்டபடுத்துறங்க,,,,

இவங்களே
விலைவாசி உயர்வுக்கு இது தான் காரணம்னு match பண்ணிட்டு போ வேண்டிது தானே....

--> pranab mukherjee யிடம் விலைவாசி உயர்வுக்கு காரணம் கேட்டதற்கு தான் இதனை அளப்பலும்.
வடிவேலு ஒரு படத்தில ஆட்ட திருடிட்டு சமாளிபாறு அந்த சுனா பானா மாதிரி இருந்தது இவர் பண்ணியது.ஆனா முடியாம கோபப்பட்டார் ...
கையால் ஆகாதவருக்கு கோபம் வருமாம் சரியாதான் இருக்கு.

..............இருந்தாலும் அவர பாத்து எப்படி அந்த கேள்வி கேக்கலாம்