உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் இன்று டெல்லியில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தியா பாகிஸ்தான் உடனான தனது முதல் போட்டியில் 4-1 என்ற கோல் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இரண்டு கோல்கள் அடித்த சந்தீப் சிங்க் ஆட்டநாயகனாக தேர்தேடுக்க பட்டார்.சிவேந்திரா,பிரப்ஜோத் தலா ஒரு கோஅல் அடித்தனர்.
பல இன்னலுகளுக்கு மத்தியில் இன்று வீரர்கள் ஆடிய துடிப்பான ஆட்டம் என்னை பிரமிக்கவைகிறது.கோல் அடித்த விதமும் , கோல் தடுத்த விதமும் உண்மையாவே சொல்றேங்க சுபெறோ சூப்பர்.
சந்தோசமான செய்தி--இந்த வெற்றிய கொண்டாடும் விதமா வீரர்களுக்கு தலா ஒரு லட்சம் பரிசு வழங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருத்தம்---நம்ம தேசிய விளையாட்டுக்கு சேஹ்வாக் , பிரியங்கா சோப்ரா வெச்செல்லாம் விளம்பர படுத்த வேண்டி இருக்கு.
அரசு உக்கபடுதின கண்டிப்பா ஹாக்கி வளரும்கரதுல எந்த சந்தேகமும் இல்ல.
இந்தியா வென்றதில் பரவசநிலை அடஞ்சுட்டேன்க, அடுத்த match யும் update செய்றேன்.
தயவு செய்து ஓட்டு போடுங்க எல்லார்கிட்டயும் சொல்லணும்.
Sunday, February 28, 2010
வென்றது இந்தியா
இடுகையிட்டது BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) நேரம் 8:15 AMSaturday, February 20, 2010
காப்பாற்ற படுமா புலிகள்
இடுகையிட்டது BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) நேரம் 8:42 AM
இப்போ நீங்க பார்த்த படங்களில் உள்ளவை புலிகளின் அழிக்க பட்டஇனங்களாகும்.புரியவில்லையா, புலி இனத்தில் மொத்தம் 8 உட்பிரிவுகள்உள்ளன ,அவற்றில் மூன்றை நாம் வெற்றிகரமாக அழித்துவிட்டோம்.அழிக்கப்பட்ட ஜவன்,பாலி,காஸ்பியன் இன புலிகள் இவை.
ஒரு இனத்தை அழிப்பது நமக்கு புதிதல்ல ஏற்கனவெ நாம் சிறுத்தை, குருவி, பட்டாம்பூச்சியை அழித்துவிட்டோம்.
இந்த உயிரினங்கள் அழிந்தால் தான் என்ன?? இதனால் என்ன பயன் என்றுநினைபவர்கள் உண்டு. இப்படி சுயனலமா யோசிச்சா எப்படி ??
இப்போ நம்மிடம் கோழி,ஆடு,மாடு,நாய்,காகா மட்டுமே இருகிறது !!! இதுவும்அழிவு தான் நமக்கு.மனிதன் மட்டும் இருப்பான் கடைசி வரைக்கும்..
மனிதனுக்கு அற்ப்ப குணம் உண்டு எதுவும் அழகா இருந்தா பிடிக்காது. அழகாகாட்டுல இருக்கிற புலிய வீட்டுல வெச்சுக்க ஆசை.நிறைய இருக்குனுநினைக்காதீங்க கடந்த நூற்றாண்டில் 40,000 இருந்துச்சு இப்போ 1411 தான்இருக்கு.
கடந்த ஆண்டு மட்டும் 84 புலிகள் செத்து இருக்கு.இதே நிலைமை நீடித்தால் 2015ல் ஒரு புலி கூட இருக்காது. எந்த பொறுலும் சுலபமா கெடச்சுடா மதிப்புஇருக்காது.ஏதோ நம்ம நாட்டில் புலி இறுப்பதால் அதன் மதிப்பு தெரியல.
புலிகளை காக்க :
கவலை வேண்டாம் ஒன்றும் நேரவில்லை, நம் அனைவரின் பங்களிப்புஇருந்தால் இபோதும் நாம் புலிகளை காப்பாற்றலாம்.
==>புலிகளுக்கு இருக்கும் பெரிய ஆபத்து அதன் உரைவிடம் மற்றும் உணவு அழிக்க படுதல்.வேட்டையாடுவதை விட இதனால் அதிக புலிகள் இறப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
காட்டு பகுதியை பராமறிப்பது பொது மக்கள் கையில் இல்லை என்றாலும் இது அரசு அதிகாரிகள் கடமை. அவர்கள் வேலை செய்யும் லச்சனம் தெரியாதா நமக்கு !!!! எனினும் பொது மக்களுக்கு விழிபுணர்ச்சி வந்தால் அவர்கள் திருந்துவார்கள்.
==> மேலும் காடு சார்ந்த பகுதியில் வாழும் மக்கள் அவ்வப்போது புலிகளால் தாக்கப்படுவதால் அவர்களுக்கு புலிகள் மேல் வெறுப்பு. மக்களின் ஆதரவு இல்லாமல் புலிகள் கண்டிபாக காப்பாற்றபட முடியாது.அவர்களும் விழிப்புணர்வு பெற வழிவகை செய்தால் புலிகளை கண்டிப்பாக காப்பாற்றலாம்.
மிருக்காட்சிசாலையிலும்,அருங்காட்சியிலும் வைக்க அல்ல புலிகள் அதன் இயற்கை வாழ்விடத்தில் வாழவே அவை.
எனினும் இத்தலைமுறையினர் இயற்க்கை மீதும் ,விலங்குகள் மீதும் அக்கரை கொண்டால் மட்டுமே இவை அனைத்தும் சாத்தியம் ஆகும்.
( தேசிய விளையாட்டை மறந்த மாதிரி தேசிய விலங்கை மறக்கவேண்டாம் )