இந்த பதிவு லஞ்சத்தை ஒழிக்க போராடும் ஐந்தாவது தூண் பற்றியது. ஐந்தாவது தூண்-இது லாப நோக்கமில்லாத, அரசு சார்பற்ற ஒரு அமைப்பு. இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும் லஞ்சத்தை ஒழிக்க மேற்கொள்ளும் முயற்சியில் அவர்களை ஊக்குவிப்பதும், உதவி செய்வதும் இந்த அமைப்பின் நோக்கம்.
மக்களின் அடிப்படை உரிமைகள் அவர்களுக்கு லஞ்சம் இன்றி கிடைத்திட, அவர்களை ஊக்கபடுத்த துடிக்கும் ஒவ்வொரு குடிமகனையும்
ஐந்தாவது தூணில் இணைந்து செயலாற்ற வரவேற்கிறோம்.
மாவட்ட அளவிலும், சட்டசபை தொகுதி அளவிலும், ஊராட்சி ஒன்றிய அளவிலும் அமைப்புகளை ஏற்படுத்திஉள்ளது..இந்த அமைப்புகள் உள்ளூர் அங்கத்தினரால் அமல்படுதபடுகிறது.
நாட்டின் அணைத்து இடங்களிலும் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை ஆர்.எஸ் புறத்தில் நடைபெறும் பொருட்காட்சியில் ஒரு stall நிறுவியுள்ளோம்.இங்கு zero rupee நோட்டை விநியோகித்து வருகிறோம்.ஒரு லட்சம் நோட்டுகளை அடித்துள்ளோம். குறைந்தது 30,000 மக்களிடம் தகவலை கொண்டுசெல்ல திட்டமிட்டுளோம். 22-5-10 தொடங்கி நாற்பது நாட்கள் ஸ்டால் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
ஐந்தாவது தூணில் சேர ஆர்வமுள்ளோர் நேரடியாக வரும்படி கேட்டுகொள்கிறேன்.
இடம்:
சாஸ்திரி மைதானம்,
ஆர்.எஸ் புறம்,
கோவை.
Others please contact:
41,circular road,united india colony,kodambakkam,Chennai-600024
Phone no: 044-65273056 / 9445164555
Email:endcorruption@5thpillar.org
Website:www.5thpillar.org
5th pillar,
111,1st floor, iswarya complex,
Gopalapuram, Coimbatore-641018
Phone no:9600841045 / 9363126320
Email: cbe@5thpillar.org
சில பேர் இந்த நோட்டை காசாக்கும்னு நினைச்சு வாங்க பயந்துட்டாங்க , அப்புறம் இலவசம்னு சொல்லி கொடுத்தேன்.
சில பேர் லஞ்சத்தை ஒழிக்க முடியாதுனு வாதாடினாங்க.
சில பேர் கோபபட்டாங்க ( அவங்க லஞ்சம் வாங்குறவங்க போல !!!!! )
சில பேர் கண்டுக்கவே இல்ல.
சில பேர் லஞ்சத்தை ஒழிக்கணும்னு சொன்னா எதுக்கு ஒழிக்கணும்னு கேக்குராங்க. ( அப்படி பழகிடுச்சு லஞ்சம் கொடுகிறது )
இதுவாவது பரவாஇல்ல, ஒருத்தன் சொன்னா பாருங்க பதில்,,,கூட நான்கு பெண்களுடன் வந்தான் (அவனுக்கு எதுக்கு மரியாத )
நான்: சார் அமைப்பில் சேருரிங்களா ??
அவன்: நா எதுக்கு சேருறேன், நானே அந்த காசுலதான் இப்படி செலவு பண்ணுறேன்.
நான்: !!!!! ( அப்படியே ஷாக் ஆயிட்டேன் )
9 கருத்துரைகள்:
உங்கள் முயற்சிக்கு பாராட்டுகளுடன் வாழ்த்துகள்.. லஞ்சம் வாங்குபவர்கள் யாருமில்லை நம்மில் ஒருவர்தான். நம்முடைய அண்ணனோ தம்பியோதான்.. வளரும் இளஞர்கள்தான் இதை உணர்ந்து கட்டுப்படுத்த முடியும்
இதையும் படித்து பார்க்கவும் உங்களின் எண்ணங்களுக்கு உதவியாக இருக்கலாம்
நெஞ்சு பொறுக்காமல் உங்களுடன் ஒரு பகிர்வு...
சில பேர் லஞ்சத்தை ஒழிக்கணும்னு சொன்னா எதுக்கு ஒழிக்கணும்னு கேக்குராங்க. ( அப்படி பழகிடுச்சு லஞ்சம் கொடுகிறது )
முதலில் இந்த பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே...நம்மில் வேரூன்றிப் போன ஒரு அங்கமாய், அவயமாய் மாறிப் போய் விட்டது லஞ்சம்...வளரும் சமுகத்தில்,லஞ்சம் பற்றி அறிவை விதைத்தால் நிச்சயம் லஞ்சத்தை குறைக்கலாம்..வாழ்த்துக்கள் உங்கள் பதிவுக்கு
@ரேவா
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்கோ....
ஒட்டு போடு விட்டேன் என்னுடைய கணக்கில் நன்றி
சார்...படிக்கவும் ,கேட்க்கவும்,நல்லதான் இருக்கு.லஞ்சம் ஒழியுமா?ஒரு 50 அல்லது 100 வருடத்திலாவது? ஒழிந்தால் நல்லது.காலப்போக்கில் உங்கள் அமைப்பு காணாமல் போய்விடக்கூடாது.
இப்போ இருக்கும் காலம் லஞ்சம் வாங்காதவனை பார்த்து சிரிக்கும் காலம்...காந்தி ஒருவராக தான் போராட்டத்தை தொடங்கினார்.அது போல் உங்கள் அமைப்பும் நாடு முழுதும் பரவ வாழ்த்துக்கள்....
சார் பதிவுக்கு வாழ்த்துக்கள்
நல்ல தகவல்கள்
@karurkirukkan
நன்றி நண்பரே.......
வாங்க malar....
//படிக்கவும் ,கேட்க்கவும்,நல்லதான் இருக்கு.லஞ்சம் ஒழியுமா?//
ஒழிந்தால் நல்லா இருக்கும்னு சொல்றேங்க,,,,
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி...
@Mahan.Thamesh
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே.......
Post a Comment